அதியமான் ( சத்தியபுத்திரன் அதியன் )

அதியமான் -  மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை ஆண்டோர் ஆவர். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர். இது இன்றைய தருமபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் ( வன்னியர்) சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள். அதற்கு ஆதாரமாக,
  1. பனம்பூ மாலை சேரருக்கே உரியதாயினும், அது அதியனின் முன்னோர்களைப் போல் அதியருக்கும் உரியதே என்றும், புறம் 99 இல் கூறப்பட்டுள்ளது. இது, சங்ககாலத்தில் அதியரும் சேரரும் ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.[3]
  2. கி.பி.13ஆம் நூற்றாண்டில் அதியர் மரபைச் சேர்ந்த விடுகாதழகிய பெருமாளின் வேலூர் மாவட்டம் திருமலைக் கல்வெட்டில் வஞ்சியர் குலபதி எழினி என்றும், சேர வமிசத்து அதிகைமான் எழினி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  3. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவனப்பள்ளியில் கிடைத்த விடுகாதழகிய பெருமாளின் கல்வெட்டில் விடுகாதழகிய பெருமாளை சேரமான் பெருமாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
  4. சித்தூர் மாவட்டம் லதிகம்/லட்டிகம் என்று இன்று வழங்கப்படும் ஊரில் உள்ள விடுகாதழகிய பெருமாளின் கல்வெட்டில், சங்ககால சேரரின் சின்னங்களான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன.
  5. விடுகாதழகிய பெருமாள் என்ற பெயரில் உள்ள அழகிய பெருமாள் எனும் பட்டம் பிற்கால சேரருக்கும் இருந்தது.
  6. 16ஆம் நூற்றாண்டைச் சேர்த்த கரபுரநாதர் புராணத்தில், அதியனை சேரலன் என்றே குறிக்கப்படுகின்றது.
இவற்றின் மூலம், அதியர் மரபினர் சேரரின் கிளை மரபினர் என்பதும்[8] பிற்கால சோழருக்குக் கீழ் பிற்கால அதியர் மரபினனான விடுகாதழகிய பெருமாள்ஆட்சி செய்த நிலப்பரப்பும் அறியவருகிறது.
தற்கால தருமபுரி மாவட்டம் தவிற, சங்ககால அதியர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பு எது எது என்று முழுமையாக அறியப்படவில்லையென்றாலும், கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து[1] கி.பி. 1ஆம் நூற்றாண்டு[2][9] வரை இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் ஆதாரங்களையும் சங்க இலக்கிய ஆதாரங்களையும் வைத்து பார்க்கும் போது, அதியன் நாடு மலையமான் ஆட்சி செய்த திருக்கோவலூர் நாட்டின் எல்லை வரை நீண்டிருந்தது தெரியவருகிறது. பிற்கால அதியர் மரபினர், இதுவரை கிடைத்துள்ள இலக்கியம் மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் படி, பிற்கால சோழருக்குக் கீழ், கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, தற்கால ஆந்திரத்தில் உள்ள சித்தூர், தமிழ்நாட்டின் வட ஆற்காடுதென் ஆற்காடுசேலம்திருச்செங்கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி ஆட்சி புரிந்தனர்.

Comments

Popular posts from this blog

சக்கரை வேம்பு (SCOPARIA DULCIS)

தமிழ் நாவல்கள் தரவிறக்கம் :

கருங்காலி மரம்